வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... நபார்டு வங்கியில் வேலை

28th Jul 2021 03:48 PM

ADVERTISEMENT


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.2/Grade A/2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General - 74
பணி: Agriculture - 13
பணி: Agriculture Engineering - 03
பணி: Animal - Husbandry - 04
பணி: Fisheries - 06
பணி: Forestry - 02
பணி: Plantation/Horticulture - 06
பணி: Land Development/Soil Science - 02
பணி: Water Resources - 02
பணி: Finance - 21
பணி: Computer/ Information Technology - 15

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்  இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.28,150 - 55,600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... துணை ராணுவப் படையில் வேலை

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் போன்ற நகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கூட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 07.08.2021

Tags : recruitment Bankjobs jobs வேலைவாய்ப்பு அறிவிப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT