வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலை 

23rd Jan 2021 02:47 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லம்(ஆண்கள்) மற்றும் சத்யா அரசினர் குழந்தைகள் இல்லம்(பெண்கள்) இல்லங்களில்  தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மத்திப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சமூகப் பாதுகாப்புத்துறை

பணியிடம்: தஞ்சாவூர்

பணி: ஆற்றுப்படுத்துதல் (Counsellor) 

ADVERTISEMENT

காலியிடங்கள்: 06 (3+3)

தகுதி: உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.thanjavur.nic.in மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக தங்களது விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.  

1. கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம்(ஆண்கள்), வ.ஊ.சி. நகர், தஞ்சாவூர் - 613 007

2. கண்காணிப்பாளர், அன்னை சத்யா குழந்தைகள் இல்லம்(பெண்கள்), மேம்பாலம், தஞ்சாவூர் - 613 001 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும் .
 

Tags : recruitment jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT