வேலைவாய்ப்பு

ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் தொழில் பழகுநர் பயிற்சி

20th Jan 2021 04:35 PM

ADVERTISEMENT


கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: GTRE/HRD/026&027

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 80

ADVERTISEMENT

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பயிற்சி: Diploma Apprentice

காலியிடங்கள்: 30

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 40 

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.7,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
2018 ஆம் கல்வி ஆண்டுக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகுதி, ஒரு ஆண்டுக்கும் அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான முடிவு www.drdo.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வெளியிடப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2021

Tags : மத்திய அரசு வேலை Central Govt Jobs Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT