வேலைவாய்ப்பு

விண்ணப்பங்கள் வரவேற்பு: புழல் சிறையில் மின் கம்பியாளர் வேலை

9th Jan 2021 02:47 PM

ADVERTISEMENT


சென்னை புழல் சிறை-1 இல் காலியாக உள்ள தொழிற்நுட்ப பணியிடங்களான மின் கம்பியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மின் கம்பியாளர் (Wire Man)

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் குறையாத காலத்திற்கு மின்செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நடைமுறை அனுபவம், அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சம்மந்தப்பட்ட மின் பராமகிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்க வேண்டும். 

சென்னை தொழில்நுட்ப பள்ளி அல்லது மின்சார வாரிய தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் வயர்மேன் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனுபத்தின் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் அல்லது D.G.E. & T.Diploma in Trade of
Lineman and wireman or National Trade Certificate in the Trade of Wireman அல்லது National Apprentice Certificate in the Trade of Wireman கல்வித்தகுதி கொண்ட நபர்கள் மற்றும் ஒரு ஆண்டு நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.18200-57900 என்ற  அடிப்படையில் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகப்பட்சமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் -32க்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்- 32, ஓசி பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேசி: 18.01.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை ) புழல், சென்னை - 66, தொலைபேசி எண்.044- 26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். 

மேலும் விவரகள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021010674.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT