தமிழ்நாடு அரியலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 19 தனி உதவியாளர், இளநிலை உதவியாளர், நேர காப்பாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.3/ACW/2018
மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Personal Assistant - 04
சம்பளம்: மாதம் ரூ.19500-62000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.19500-62000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினி அறிவியலில் 6 மாத டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Time Keeper - 02
சம்பளம்: மாதம் ரூ.5670-102-7710
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver - 03
சம்பளம்: மாதம் ரூ.5680-102-7720
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tancem.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor, No.735,
Anna Salai, Chennai 600 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2021
மேலும் விவரங்கள் http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.