வேலைவாய்ப்பு

ஆதி திராவிடர் நலத்துறையில் வேலை வேண்டுமா?

2nd Jan 2021 11:13 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்  நிரப்பப்பட உள்ள 37 சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 37

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: சமையலர்
காலியிடங்கள்: 33 (ஆண்-25, பெண்-08)
சம்பளம்: மாதம் 15,700-50,000 ஊதிய பிணைப்பில் ரு.15,700 வழங்கப்படும்.  

ADVERTISEMENT

பணி: பகுதி நேர துப்புரவாளர்
காலியிடங்கள்: 04 (ஆண்-02, பெண்-02)
சம்பளம்: தொகுப்பூதியத்தில் இருந்து மாதம் ரூ.3000

தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடங்களுக்குஅனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பத்தாரர்கள் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 12.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://Tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT