வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

26th Feb 2021 02:50 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான National Aluminium Company- இல் சுரங்கத்துறை சார்ந்த (Mining) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Mining Mate
காலியிடங்கள்: 18
சம்பளம்: ரூ.34,000 - 98,000 (பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கப்படும்)
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Mining Mate பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பிரிவில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்பவரகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 முதல் 41 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Foreman Mining
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.37,900 - 1,25,000 (பயிற்சியின்போது மாதம் ரூ.16,000 உதவித்தொகையாக வழங்கப்படும்) 
தகுதி: பொறியியல் துறையில் Mining பிரிவில் டிப்ளமோ மற்றும் Mining Foreman சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 46 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: UR, OBC, EWS ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Recruitment Cell, Mines & Refinery Complex, National Aluminium Company Ltd., Damanjodi, Koraput, Odisha - 763 008

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2021

மேலும் விவரங்கள் அறிய www.nalcoindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tags : job news in tamil jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT