வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குத்தான்...  ரூ.1.19 லட்சம் சம்பளத்தில்  விவசாய அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

19th Feb 2021 01:17 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை 

பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension))

காலியிடங்கள்: 365

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (B.Sc Agri) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.   

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2021

Tags : jobs jobs Notification 2021 Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT