வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் வேலை

11th Feb 2021 03:10 PM

ADVERTISEMENT


சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனமானது நாட்டில் கல்வி மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு, கன்சல்டன்சி, ஆலோசனை மற்றும் சிறப்பு சேவைகள் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல திட்டங்களை ஊக்குவிக்கும் ஒரு உச்சபட்ச தொழில்நுட்ப நிறுவனம் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 28

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ADVERTISEMENT

Group 'B' பணியிடங்கள் விவரம்:
பணி: Steno Gr.II - 02
பணி: Librarian - 01
பணி: Staff Nurse - 01
பணி: Technical Assistant(Lab) - 01
பணி: Senior Technical Assistant (Documentation) - 01
பணி: Assistant Research Officer (Humanity Group) - 01
பணி: Technical Assistant (Press) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

Group 'C', MTS and Group 'D' பணியிடங்கள் விவரம்:
பணி: Pharmacist - 01
பணி: Receptionist - 01
பணி: Stenographer Grade III - 09
பணி: Assistant Store Keeper - 01
பணி: Copy Holder - 01
பணி: Feeder - 01
பணி: Laboratory Attendant - 01
பணி: Animal Attendant - 01
பணி: Multi Tasking Staff - 04

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து, நர்சிங், டிஎம்எல்டி முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட துறையில் பட்டம், அறிவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 25 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் துறைசார்ந்த ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: http://www.nihfw.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Director (ADMN),
NIHFW , Baba Gang Nath Marg,
Munirka, New Delhi -110 067.

மேலும் விவரங்கள் அறிய http://www.nihfw.org அல்லது http://www.nihfw.org/Doc/Revised%20advt.%20for%20Group%20B%20Posts%2029012021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2021 

Tags : jobs Notification 2021 Recruitment j
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT