வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தொழில்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

11th Feb 2021 03:00 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசு தொழில்துறையில் காலியாக உள்ள 7 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில்துறை

பணியிடம்: சென்னை

ADVERTISEMENT

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தே, தயார் செய்தோ பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு துணை செயலாளர், தொழில்(அதமு) துறை, தலைமை செயலகம், சென்னை - 600009.

மேலும் விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 23.02.2021

Tags : jobs JOB REQUIREMENT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT