வேலைவாய்ப்பு

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

6th Dec 2021 11:00 AM

ADVERTISEMENT


மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் செயல்பட்டு வரும் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.04/2021

நிறுவனம்: Central Mechanical Engineering Research Institute 04/2021

பணி: Technical Assistant

ADVERTISEMENT

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ. 53,988

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.cmeri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Advertisement%20No.04_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Vacancy Technical Assistant Post Employment வேலைவாய்ப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT