வேலைவாய்ப்பு

தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

6th Dec 2021 10:00 AM

ADVERTISEMENT


தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர். துணை மேலாளர், மண்டல மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Housing Bank

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 14

ADVERTISEMENT

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது. மொழித்திறன், பகுப்பாய்வு திறன் மற்றும் பொருளாதாரம் சூழ்நிலை குறித்த திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: Deputy Manager
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம், எம்பிஏ, சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Regional Manager
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  ஏதாவெதாரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், சார்ட்டர்ட் ஃபைனான்சியல் முடித்திருப்பவர், சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் மற்றும் பணப்புழக்கம் மேலாண்மை மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tags : jobs Bankjobs வேலைவாய்ப்பு அறிவிப்பு தேசிய வீட்டுவசதி வங்கி RECRUITMENT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT