வேலைவாய்ப்பு

ஆயுஷ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

5th Dec 2021 12:56 PM

ADVERTISEMENT


தேசிய ஆயுர்வேதா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 2/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Pachakarm Vaidya - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆயுர்வேதாவில் எம்டி முடித்திருக்க வேண்டும். 

பணி: Junior Stenographer - 01
சம்பளம்: மாதம் 25,500 - 81,100
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஹிந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Junior Medical Laboratory Technologist - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து டிஎம்எல்டி முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதையும் படிக்க | தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பணி: Library Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lower Division Clerk - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff - 11
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவமர்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிக்க | எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பக் கட்டணம்: Pachakarm Vaidya பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.3,500, மற்ற பிரிவினர் 3,000 செலுத்த வேண்டும். இதரப் பணிகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.2,000, மற்ற பிரிவினர் ரூ.1,800 செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director, National Institute of Ayurveda,Jaipur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
The Director, National Institute of Ayurveda, Jorawar Singh Gate, Amer Road, Jaipur - 302 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2021

மேலும் விவரங்கள் அறிய  www.nia.nic.in அல்லது http://www.nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO_2_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிக்க | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

Tags : வேலைவாய்ப்பு jobs employment VACANCY NOTIFICATION வேலைவாய்ப்புகள் தேசிய ஆயுர்வேதா நிறுவனம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT