வேலைவாய்ப்பு

எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

5th Dec 2021 10:20 AM

ADVERTISEMENT


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Staff Nurse (C-5), NGL)
காலியிடங்கள்: 07
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் General Nursing and Midwifery பிரிவில் 3 ஆண்டு  டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணி: Physiotherapist (C-5)
காலியிடங்கள்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Physiotheraphy -இல் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

இதையும் படிக்க | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ADVERTISEMENT

பணி: Pharmacist (C-5)
காலியிடங்கள்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டி-பார்ம் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணி: Dresser (B-4)
காலியிடங்கள்: 02
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,555 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.09.2020 தேதியின்படி, 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

இதையும் படிக்க | ரூ.44,500 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு பெங்களூருவில் நடைபெறும். இதுதொடர்பான விவரங்கள் விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பராத் ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.hal-india.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

Tags : Jobsnotification Employment notification recruitment வேலைவாய்ப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT