வேலைவாய்ப்பு

நீதித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

2nd Dec 2021 12:35 PM

ADVERTISEMENT


பெரம்பலூர் நீதித்துறை அலகில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III(தற்காலிமானது)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தட்டச்சர்(தற்காலிமானது
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஆர்டிஓவில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு ecourts.gov.in/tn/perambalur என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படமாட்டாது.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | அரசு வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Employment வேலைவாய்ப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT