வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை

11th Aug 2021 01:46 PM

ADVERTISEMENT


இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள Advisor (Technical) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) 

பணி : Advisor (Technical) - 01

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 20 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:  மாதம் ரூ.1,65,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 

விண்ணப்பிக்கும் முறை :  https://nhai.gov.in/#/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2021

மேலும் விபரங்கள் அறிய https://nhai.gov.in அல்லது https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/detailed%20advertisement%20forAdvisor%20Tech.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT