வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை

29th Apr 2021 12:35 PM

ADVERTISEMENT

பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில் நிரப்பப்பட உள்ள 5000 இளநிலை அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைவாய்ப்பு அறிவிக்காக காத்திருந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும். 

விளம்பர எண். CRPD/CR/2021-22/09

பணி:  Junior Associate 

காலியிடங்கள்: 5000 (சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.13,075 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

Tags : Job recruitment Junior Associate Posts Bank Jobs 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT