வேலைவாய்ப்பு

வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா.. ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலை

29th Apr 2021 01:26 PM

ADVERTISEMENT


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள 12 மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்தக் காலியிடங்கள்: 12 

நிர்வாகம் : தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) 

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: 
பணி: Addl. General Manager - 01 
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000 

ADVERTISEMENT

பணி: Dy. General Manager - 02 
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000 

பணி: Project Manager - 01 
சம்பளம்: மாதம் ரூ.60,000  - 1,80,000

பணி: Dy. Project Manager - 01 
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 

பணி: Sr. Project Executive - 02 
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Assistant Manager - 01 
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Stenographer - 01 
சம்பளம்: மாதம் ரூ.24,640 

பணி: Office Assistant - 03 
சம்பளம்: மாதம் ரூ.18,430

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐசிஏஐ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு : 28 - 52 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://nbccindia.com/rec/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2021

மேலும் விவரங்கள் அறிய www.nbccindia.com அல்லது https://www.nbccindia.com/pdfData/jobs/Final_DetailedAdvt04_2021.pdf என்ற லிங்கில் சென்று  தெரிந்துகொள்ளவும். 

Tags : job JOB REQUIREMENT Central government jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT