வேலைவாய்ப்பு

வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

29th Apr 2021 11:57 AM

ADVERTISEMENT


 
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Finance Officer - 01
வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலைப் பட்டம் பெற்று நிர்வாகவியல் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: General Duty Medical Officer - 02
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 2 ஆண்டு பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: Hindi Officer - 01
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Sports Officer - 01
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உடற்கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Sr.Scientific Officer - 01
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.iitr.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.iitr.ac.in/administration/uploads/File/recruitment/2021/Adv_no_2021.02_Gp_A.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : recruitment 2021 jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT