வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

1st Apr 2021 01:54 PM

ADVERTISEMENT


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 04 

பணி: Tyreman - 01

பணி: Blacksmith - 01

ADVERTISEMENT

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு:  01.07.2021 தேதியின்படி 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணி: Staff Car Driver - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கு முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து பதிவு தபால் அல்லது விரைவுத் தபால் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ அல்லது UCR Receipt ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் ஆக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Madurai 625002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tags : Job Notification jobs Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT