வேலைவாய்ப்பு

சத்துணவுக் காலிப் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

26th Sep 2020 02:51 PM

ADVERTISEMENT


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் 125 அமைப்பாளர், 109 சமையலர், 231 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களைத் தவிர மற்ற பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். 

இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

இதில், அமைப்பாளர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும், பழங்குடியினராக இருந்தால் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சமையலர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியும், பழங்குடியினராக இருந்தால் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
சமையல் உதவியாளர் பணிகளுக்கு பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் 5-ஆம் வகுப்பு தேர்ச்சியும், பழங்குடியினராக இருந்தால் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

இப்பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் 21 வயது பூர்த்தியும் 40 வயதுக்கு மிகாமலும் உள்ளவர்களும், பழங்குடியினராக இருந்தால் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். 

சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 20 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பெண்களும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 43 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களை அணுகலாம்.

Tags : jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT