வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

25th Sep 2020 01:01 PM

ADVERTISEMENTதிருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் காலியாக உள்ள 135 சமையலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 215

பணி: சமையலர் - 135

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

ADVERTISEMENT

பணி: தூய்மைப் பணியாளர் - 80

சம்பளம்: தூய்மைப் பணியாளர் (முழு நேரம்) 13 காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,700 - 24,200, மற்ற பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.3000 தொகுப்பூதியத்திலும் வழங்கப்படும்.

தகுதி: விண்ணப்பத்தாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்கள் அறிய https://tiruchirappalli.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.10.2020

Tags : jobs Tamilnadu Govt Jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT