வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை ...தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

25th Sep 2020 12:21 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்

பணி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்( ஒப்பந்த கால அடிப்படையிலானது)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 16

தகுதி: சமூக பணி,சமூகவியல்,உளவியல்,குற்றவியல்,குழந்தை மேம்பாடு போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
அனுபவம்: சமூக பணி, குழந்தைகள் நலன், சமூக நலன், குழந்தைத் தொழிலாளர் துறையில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2020 தேதியின்படி 26 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:  மாதம் ரூ. 33,250 (ஒப்பந்த சம்பளமாக) வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கல் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
சமூக பாதுகாப்பு ஆணையர் / செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூக பாதுகாப்புத் துறை, எண், 300,
புரசவாக்கம் ஹை ரோடு, கெல்லிஸ், சென்னை -600 010
தொலைபேசி எண் .044-26421358

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2020 
 
மேலும் விவரங்கள் அறிய  https://www.tn.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT