வேலைவாய்ப்பு

கரூர் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை

25th Sep 2020 01:34 PM

ADVERTISEMENT


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள்: 422

அமைப்பாளர்: 158

தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

சமையல் உதவியாளர்: 264

தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.08.2020 தேதியின்படி 21 முதல் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆணையர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tn.gov.in/ -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT