வேலைவாய்ப்பு

வன ஆராய்ச்சி மையத்தில் கிளார்க், சுருக்கெழுத்தர் வேலை

தினமணி


ஹைதராப்த்தில் செயல்பட்டு வரும் Institute of Forest Biodiversity ஆராய்ச்சி மையத்தில் காலியாக கிளார் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Stenographer Grade-II - 01
பணி: Lower Division Clerk - 01
பணி: Multitasking Staff(MTS) - 02

வயதுவரம்பு: 24.11.2020 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் அதனை கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Director, Institute of Forest Biodiversity, Hyderabad என்ற பெயருக்கு ஏதாவதொரு தேசிய வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Director, Institute of Forest Biodiversity, Dulapally, Hyderabad - 500 100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.11.2020
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT