வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி


இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Skilled Artisan பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Artisan

காலியிடங்கள்: 19

துறைவாரியான காலியிடங்கள்: 
1. Motor Vehicle Mechanic - 08
2. Motor Vehicle Electrician - 04
3. Black Smith - 02
4. Tyreman - 02
5. Painter - 01
6. Upholsterer - 01
7. Carpenter and Joiner - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன பழுதுநீக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Trade Skill Test அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: Name, Father's Name, Citizenship, Post Applied, Permanent Address for Correspondence, Date of Birth, Age as on 1.7.2018, Technical Qualification, Experience என்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அதனுடன் சுயகையொப்பமிடப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில் ஒன்றினை விண்ணப்பத்தில் ஓட்டியும், மற்றொன்றை விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager,Mail Motor Service , 139, Beleghala Road, Kolkata - 700 015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020

மேலும்  முழுமையான விவரங்கள் அறிய www.indianpost.gov.in/Recuitment/Artisan Notification என்ற இணையதள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT