வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை

தினமணி


புதுதில்லியில் செயல்பட்டு வரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Research officer
காலியிடம்: 03 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Pharmacolgy, Bio-Chemistry பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:  40க்குள் இருக்க வேண்டும். 

பணி: Senior Library Attendant
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Driver
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவமர்பு: 28க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. தகுதியானவர்களுக்கு இதுகுறித்த தகவல் அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை Director General, CCRUM, New Delhi என்ற பெயருக்கு Bank Draft ஆக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனுடன் ரூ.10-க்கான அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவரை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020

மேலும் விவரங்கள் அறிய www.ccrum.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT