வேலைவாய்ப்பு

கேன் ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

28th Nov 2020 03:16 PM

ADVERTISEMENT


முன்னணி வீட்டுவசதி நிதி நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிதாக ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 50 Junior Officers பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50

பணி: Junior Officers

காலியிடங்கள்: 50

ADVERTISEMENT

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.16,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்.  அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.canfinhomes.com/career.aspx அல்லது https://www.canfinhomes.com/pdf/Engagement-of-JOCs.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT