வேலைவாய்ப்பு

என்சிஆர்டிசி-ல் இளநிலை பொறியாளர் வேலை

23rd Nov 2020 08:31 AM

ADVERTISEMENTதேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழக லிமிடெட் நிறுவனத்தில் புதியதாக இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.38/2020

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 52

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.27,500 - 97,350

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து கட்டுமானத்துறையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தில்லியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.ncrtc.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, August Karanti Marg, New Delhi - 110 049

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2020

Tags : jobs National Capital Region Transport Corporation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT