வேலைவாய்ப்பு

கடலோர காவல் படையில் வேலை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

23rd Nov 2020 10:00 AM

ADVERTISEMENT


இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்பட 50 பணியிடங்களுகான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: NAVIK (Domestic Branch) 10th Entry:01/2021

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

ADVERTISEMENT

வயதுவரம்பு: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும். உடற்தகுதியாக குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், மார்பளவு 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்கும் திறன், மேலும் 20-squatups, 10-pushups திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2020

ADVERTISEMENT
ADVERTISEMENT