வேலைவாய்ப்பு

கைரேகை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பிளஸ் 2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

11th Nov 2020 03:18 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்தில் உள்ள கைரேகை ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 02/2019

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Managerial Assistant - 01 (EWS)

சம்பளம்: மாதம் ரூ.45,384

ADVERTISEMENT

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பண பரிவர்த்தனை புத்தகம், கணக்கு பராமரிப்பு போன்ற பணிகளில் 3 ஆண்டு பணி அனுபவம், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant - II - 01 (EWS)
பணி: Junior Assistant - 01 (UR)

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன், எம்எஸ் ஆபிஸ், கம்பியூட்டர் அப்பிளிகேசன், நிர்வாக பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.29,639

பணி: Skilled Work Assistant - II - 01 (EWS)
சம்பளம்: மாதம் ரூ.26,960
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.200, ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   

விண்ணப்பிக்கும் முறை:  www.cdfd.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2020

Tags : jobs Recruitment 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT