வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் வேலை வேண்டுமா?

13th Mar 2020 03:17 PM

ADVERTISEMENT

 

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 50 டிசைனர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 51

பணியிடம்: விசாகப்பட்டினம் 

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: டிசைனர் (மெக்கானிக்கல்) - 10
பணி: டிசைனர் (எலெக்ட்ரிக்கல்) - 03
பணி: ஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) - 07
பணி: ஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) -09
பணி: ஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) -07
பணி: அலுவலக உதவியாளர் - 09
பணி: ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 04
பணி: ஓட்டுநர் -02 

வயதுவரம்பு: 07.04.2020 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25, 28 மற்றும் 30 வயதிற்குல் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.hslvizag.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர் கடைசி தேதி: 14.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2020

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT