வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை 

25th Jan 2020 03:51 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலிடங்கள்: 320 

பணி:  Forest Guard - 227

பணி:  Forest Guard with Driving Licence - 93

ADVERTISEMENT

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,200 - 57,900

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/pages/view/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2020

ADVERTISEMENT
ADVERTISEMENT