வேலைவாய்ப்பு

சென்னை பல்கலையில் வேலை:  விண்ணப்பங்கள் வரவேற்பு

29th Feb 2020 07:33 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT


சென்னை பல்கலைக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சைக்காலஜிஸ்ட் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: சென்னை பல்கலைக் கழகம் 

பணி: Junior Research Fellow - 01
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

பணி: Psychologist  - 01 
சம்பளம்: மாதம் ரூ. 20,000 + எச்ஆர்ஏ
தகுதி: பயோமெடிக்கல் ஜெனிடிக்ஸ், பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, லைப் சயின்ஸ், சைக்காலஜிஸ்ட் பிரிவில் எம்.எஸ்சி., எம்.பில்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. A.K. Munirajan, Professor and Head, Department of Genetics, Dr. ALM PGIBMS University of Madras Taramani, Chennai - 600 113 e-mail: akmunirajan@gmail.com 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/appointments/genetics-project-fellow_20200221102744_49542.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  06.03.2020

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT