வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?

10th Dec 2020 12:35 PM

ADVERTISEMENT


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் புதிதாக தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்:  Nuclear Power Corporation of India

பணி: Trade Apprentices

காலியிடங்கள்: 65

ADVERTISEMENT

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 16
2. Machinist - 03
3. Turner - 03
4. Welder - 04
5. Draughtsman (Mechanical) - 03
6. Electrician - 07
7. Wireman - 06
8. Instrument Mechanic - 06
9. Electronics Mechanic - 07
10. Draughtsman (Civil) - 02
11. Computer Operator and Programming Assistant -08

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 11.01.2021 தேதியின்படி 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெறப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் www.npcil.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Dy. Manager (HRM),
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station, Kalpakkam-603 102,
Chengalpattu District, Tamilnadu

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : NPCIL Recruitment jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT