வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? 

4th Sep 2019 02:51 PM

ADVERTISEMENTதமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கோவை கிளையில் காலியாக உள்ள 15 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Technician (Boilerman) - 01

ADVERTISEMENT

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சென்னை கொதிகலன்கள் இயக்கத்தின் இயக்குநரால் வழங்கப்பட்ட கொதிகலன் உதவியாளர் சான்றிதழ் Gr.II / Gr.III பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Electrician) - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து “பி” உரிம தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளோமா மற்றும் “சி” உரிம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Heavy Vehicle Driver - 07

தகுதி: 8-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 வழங்கப்படும். 

பணி: Private Secretary Grade III - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிப்பதுடன், ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தமிழில் இளநிலையும், ஆங்கிலத்தில் உயர்நிலை முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை. அனைத்து பணியிடங்களுக்கும் ஒசி பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழி தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை கோவையில் மாற்றத்தக்க வகையில், The General Manager, The Coimbatore District Co -operative Milk Producers என்ற பெயரில் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager ,
The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore – 641 010.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdcbe3008191.pdf/767c311c-98d4-abff-e924-9453974d46ce என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.09.2019

Tags : Recruitment 2019 Aavin Coimbatore Recruitment 2019 Employment Notification Aavin Recruitment 2019
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT