வேலைவாய்ப்பு

TRB Result 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு! 

20th Oct 2019 05:21 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT

 
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் அத்தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளிக்கிழமை தொடங்கி (செப் 27 முதல் 29 வரை) ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பட்டதாரிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்து 47 ஆயிரத்து 594  பட்டதாரிகள் முதல்முறையாக கணினிவழியில் தேர்வை எழுதினர். மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெற்றது.  

தற்போது இத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். 

பாடங்கள் வாரியாக மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல், புவியியல், வணிகவியல், அரசியல், இந்திய கலாச்சாரம், உடற்கல்வி, உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், ஹோம் சயின்ஸ் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தேர்வர்கள் தங்களது துறைச்சார்ந்த பாடத்தை தேர்வு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/PG_2019/PG2019_RESULT/msg1.htm லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT