வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை வேண்டுமா? சாரணர் பயிற்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

1st Oct 2019 10:19 AM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT


இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group ‘C’ Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 02

பணி: Erstwhile Group ‘D’ Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 06

வயதுவரம்பு: 01.01.20120 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.secr.indianrailways.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/1/SECR-Recruitment-2019-08-Group-C-D-Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2019

ADVERTISEMENT
ADVERTISEMENT