வேலைவாய்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா? 

22nd Nov 2019 12:28 PM | ஆர். வெங்கடேசன்

ADVERTISEMENTசிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 357

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Secretary - 14
பணி: Assistant Secretary (IT) - 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600

பணி: Analyst (IT) - 14
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

ADVERTISEMENT

பணி: Junior Hindi Translator - 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Senior Assistant - 60
பணி: Stenographer - 25
பணி: Accountant - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Junior Assistant - 204 
பணி: Junior Accountant - 19
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு எம்.ஏ (இந்தி) முடித்தவர்கள், பிளஸ் 2 முடித்து தட்டச்சு தகுதி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 27 - 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: குரூப்-ஏ பணியிடங்களுக்கு ரூ.1,500, குரூப்-பி மற்றும் சி பணியிடங்களுக்கு ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிபிஎஸ்இ பணியாளர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cbse.nic.in/newsite/attach/Final%20Advertisement%2015112019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT