வேலைவாய்ப்பு

ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வேண்டுமா? 

17th Nov 2019 07:32 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

ADVERTISEMENT

வயதுவரம்பு: அரசுவிதிமுறைகளின்படி வயதுவரம்பு பெற்றிருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600 010.

விண்ணப்பங்களை பெற http://www.tncsc.tn.gov.in/img/APPLICATIONFORASST.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.12.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT