வேலைவாய்ப்பு

இது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

11th Nov 2019 08:15 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT

 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 189க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

மொத்த காலியிடங்கள்:     189க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

நிறுவனம்:    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி: Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant

ADVERTISEMENT

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை: 

1. அரியலூர் - 11 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

2. ஈரோடு - 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

3. கரூர் - 14 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

4. கிருஷ்ணகிரி - 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

5. நாமக்கல்    - 19 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

6. திருவாரூர் - 12 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

7. நாகப்பட்டினம் - 20 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

8. தூத்துக்குடி - 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

9. காஞ்சிபுரம் - 49 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

10. ராமநாதபுரம் - 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையோ பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

ADVERTISEMENT
ADVERTISEMENT