வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... இந்திய ரயில்வேயின் 'ரயில் வீல் பேக்டரி நிறுவனத்தில் வேலை

1st Nov 2019 01:03 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'ரயில் வீல் பேக்டரி' நிறுவனத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 192 'தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணி: Apprentices

காலியிடங்கள்: 192

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 85
2. Mechinist - 31
3. Mechanic (Motor Vehicle) - 08
4. Turner - 05
5. CNC Programming Cum Operator (COE Group) - 23
6. Electrician - 18
7. Electronic Mechanic - 22

ADVERTISEMENT

வயதுவரம்பு: 15.11.2019 தேதியின்படி 15 வயது பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் சம்மந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: சி.என்.சி., புரோகிராமிங் ஆப்ரேட்டர் பயிற்சிக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.12,261 வழங்கப்படும். மற்ற பயிற்சிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.10,899 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The senior Personnel officer,
Personnel Department,
Rail Wheel Factory,
Yelahanka, Bangalore - 560 064

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை Principal Financial Adviser, Rail Wheel Factory என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2019

 

ADVERTISEMENT
ADVERTISEMENT