எஸ்பிஐ வங்கியில் 641 சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்,’  மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட்
எஸ்பிஐ வங்கியில் 641 சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்,’  மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் என 641 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Head (Product, Investment & Research) - 01
2. Central Research Team (Fixed Income Research Analyst) - 01
3. Relationship Manager 
4. Relationship Manager (e-Wealth) 
5. Relationship Manager (NRI) 
காலியிடங்கள்: 486

6. Relationship Manager (Team Lead) - 20
7. Customer Relationship Executive - 66
8. Zonal Head Sales (Retail) (Eastern Zone) - 01
9. Central Operation Team Support - 03
10. Risk & Compliance Officer - 01
11. Bank Medical Officer (BMO-II) MMGS-II - 56
12. Manager Analyst MMGS-III - 06
13. Advisor for Fraud Management - 03

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.  ‘ரிலேசன்ஷிப்’ அதிகாரி பணிக்கு 23 முதல் 35 வயதிற்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களுக்கும், எம்.பி.ஏ. மற்றும் முதுகலை முடித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிடங்களுக்கும், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf  மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com