ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 1704 சார்ஜ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை



இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 1704 சார்ஜ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1704

பணி: Chargeman(Non-Gazetted Group 'B' )
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
www.i-register.org 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கெமிக்கல், மெட்டாலார்ஜி, குளோதிங் டெக்னாலாஜி, லெதர் டெக்னாலாஜி போன்ற பிரிவில் பொது வேதியலை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இன்பர் மேஷன் துறையில் கணின் அறிவியல் பிரிவில் 'ஏ' லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

டெக்னிக்கல் அல்லாத துறையில் பொறியியல், டெக்னிக்கல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, திருச்சி, அரவங்காடு(ஊட்டி)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை RRINCIOAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI-NAGOUR  என்ற பெயரில் செலான் எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.i-register.org என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் விண்ணப்பக் கட்டண ரசீது மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Principal Director, Recruitment Fund Ordnance Factory Board, Ambajhari-Nagpur.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.i-register.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com