ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை

இந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு
ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை


இந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பிரிவு: ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ 

காலியிடங்கள்: 65

வயது வரம்பு: 31.12.2019 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ். முடித்து பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பி.டி.எஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கை வைசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்களை www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com