இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் 

மொத்த காலிப் பணியிடம்: 28 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: கள உதவியாளர் - 10 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.16,962 
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 04.06.2019 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது. 

பணி: இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 18 
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2019 காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது. 

தகுதி: Genetics, Plant Breeding, Genetics and Plant Breeding, Biotechnology, Life Sciences, Bioinformatics,Computer Science, Statistics, Biostatistics, Breeding போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Division of Genetics, ICAR-IARI, Pusa Campus, New Delhi - 110012. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/ICAR-BMGFInterviewJRF_PA_15052019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com