சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

பட்டதாரிகளுக்கு கனரா வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் வேலை

Published: 16th May 2019 12:24 PM

கனரா வங்கியின் வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் துணை நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர், ஜூனியர் ஆபீசர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: முதுநிலை மேலாளர் - 10
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 62 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: வங்கிப் பணிகளில் போதிய அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: ஜூனியர் ஆபீசர் - 100 
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க  வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.canfinhomes.com/pdf/Career/Engagementofsmc-JOCs.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலை... வேலை... வேலை... ரூ.1,80 லட்சம் சம்பளத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை
ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தில் வேலை
கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி