பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு... ராணுவத்தில் பயிற்சியுடன் அதிகாரி வேலை

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம்
பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு... ராணுவத்தில் பயிற்சியுடன் அதிகாரி வேலை


இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய ராணுவத்தில் 130-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் (டி.ஜி.சி.-130, ஜன 2020) சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும். இந்த பணி 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்கக்கூடிய  ஒரு பணியாகும்.

மொத்த காலியிடங்கள்: 40 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

  1.  Civil - 10 
  2.  Architecture - 01
  3.  Mechanical - 06
  4.  Electrical / Electrical & Electronics - 06
  5. Computer Sc & Engg / Computer Technology/ Info Tech/ M. Sc Computer Sc - 08
  6. Electronics & Telecom/ Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication - 05
  7. Electronics - 01
  8. Metallurgical - 01
  9. Electronics & Instrumentation/ Instrumentation - 01
  10. Micro Electronics and Microwave - 01

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.01.1993 மற்றும் 01.01.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராகவும், இரு தேதிகளிலும் பிறந்தவராக வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மேற்கண்ட பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஒராண்டு பயிற்சி அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tgc_130.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com