திங்கள்கிழமை 20 மே 2019

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

Published: 01st May 2019 01:11 PM


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 

பணி: அட்டென்டர் 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Manager/Chairman, LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/English/career.aspx அல்லது www.centralbankofindia.co.in என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2019  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
எல்ஐசி-ல் 1,753 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?