திங்கள்கிழமை 20 மே 2019

கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Published: 01st May 2019 04:04 AM


கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்த விவரம்: 
காஞ்சிபுரம் மாவட்டம் புழல் மத்திய சிறை-1-இன் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம் கிளைச் சிறைகள் உள்ளன. இதில், காலியாக உள்ள சமையலர் (ஆண்), செவிலி உதவியாளர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: சமையலர், செவிலி உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் 2 ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவம் இருக்க வேண்டும். துப்புரவுப் பணியிடத்துக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32, பொதுப் பிரிவினருக்கு (ஓ.சி.) 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சமையலர், செவிலி உதவியாளர் பணியிடத்துக்கு ரூ.15,900-50,400 என்ற ஊதிய விகித அடிப்படையிலும், துப்புரவுப் பணியிடத்துக்கு ரூ.15,700-50,000 என்ற அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தகுதியுடைய விண்ணப்பங்களை, சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை), புழல், சென்னை-66 என்ற முகவரிக்கு மே 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-26590615 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?
ராணுவத்தில் வேலை வேண்டுமா...?  விண்ணப்பிக்க இன்றே கடைசி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளை கடைசி! 
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வெளிநாட்டில் செவிலியர் வேலை